தரங்கம்பாடியில் கரை இறங்கி தேவ சேவை செய்ய வந்த சங்கை சீகன் பால்கு ஐயர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ்வேதாகம மொழிபெயர்ப்புப் பணி பல அக்கால அயல்நாட்டு மிஷனெரிகளால் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டு முழுவேதாகமாக தமிழ்வேதாகமம் வெளிவந்தது. இன்றும் கிறிஸ்தவர்களால் பெரிதும் விரும்பி பயன்படுத்தப்படுவது இந்த பதிப்பே.
முழு தமிழ்வேதாகமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் (Download) செய்ய கீழே உள்ள linkஐ click செய்யவும்.
பரிசுத்த வேதாகமம் (தமிழ்)
https://sites.google.com/site/jeraldkingston/Home/E-TamilHolyBible.pdf
Friday, December 4, 2009
Wednesday, December 2, 2009
தமிழ் வேதாகமம் WBTC பதிப்பு
ஆங்கிலத்தில் ஏராளமான வேதாகம மொழிபெயர்ப்புகள் உண்டு. தமிழில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு மொழிபெயர்ப்பும், ஏனைய கிறிஸ்தவர்கள் வேதாகமச் சங்கம் அச்சிடும் மொழிபெயர்ப்பு ஆக இரண்டு மொழிபெயர்ப்புகள் இருந்துவந்தது. பின்பு பொது மொழி பெயர்ப்பு வெளிவந்தது. பொது மொழிபெயர்ப்பும் கூட இன்னமும் பரவலாக எல்லாராலும் பயன்படுத்தப்படவில்லை. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்தான் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு பயன்படுத்திவருகின்றனர். சி.எஸ்.ஐ மற்றும் பெந்தோகோஸ்தே போன்ற இதர கிறிஸ்தவர்கள் பழைய மொழிபெயர்ப்பையே இன்றும் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். பொது மொழி பெயர்ப்பில் குறை உண்டு என்று சொல்பவர்களுக்கு WBTC வெளியிட்டுள்ள வேதாகம மொழி பெயர்ப்பு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். ஆங்கில வேதாகமங்களுக்கு இணையாக உள் தலைப்புகளையும் சிறு விளக்கங்களையும் கொண்ட இப்புதிய வேதாகமம் மிகவும் பயனுள்ளதாகவும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் வேதாகமத்தை Download செய்ய Please click the links below
1.பழைய ஏற்பாடு
2. புதிய ஏற்பாடு
தமிழ் வேதாகமத்தை Download செய்ய Please click the links below
1.பழைய ஏற்பாடு
2. புதிய ஏற்பாடு
தமிழ் வேதாகமம் ஒரு அறிமுகம்
வேதாகமத்தின் உள்ளடக்கத்தைக் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்துடன் நமக்கு பரிச்சயம் இல்லத பதங்களைக் குறித்த சிறிய விளக்க குறிப்புகளும் இந்த மின் புத்தகத்தில் உள்ளது. இந்த மின் நூலை தரவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்க்கை கிளிக் செய்யவும்.
To download click the below link
தமிழ்வேதாகமம் ஒரு அறிமுகம்
To download click the below link
தமிழ்வேதாகமம் ஒரு அறிமுகம்
தமிழ் கிறிஸ்தவ புத்தகங்கள்
தமிழ் மொழியில் முதன் முதல் அச்சிடப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம். அது மட்டுமல்ல இந்தியாவிலேயே முதல் புத்தகம் தமிழ் வேதாகமம் தான். தமிழ் வேதாகமம் அச்சிடப்பட்ட நாள் முதற்கொண்டு இதுகாறும் ஏராளமான கிறிஸ்தவ புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கின்றன. வழக்கம் போல் பழமை நூல்கள் இன்று பலர் கைகளில் இல்லை, புதிய நூல்கள் கூட இன்னமும் இணையதளங்களில் புழங்க வில்லை. இணையதளத்தில் கண்ட குப்பைகளுக்கெல்லாம் ஏராளமான மின் புத்தகங்கள் (E-Books) கிடைக்கும் போது தமிழ் கிறிஸ்தவ நூல்கள் கிட்டதட்ட இல்லை என்று சொல்லுமளவுக்கு இணைய தளத்தில் அவற்றை காண்பது அரிதாக உள்ளது. அக்குறையைப் போக்கும் ஒரு சிறிய முயற்சியே இந்த வலைப்பூ. உங்களிடம் ஏதேனும் கிறிஸ்தவ புத்தகங்கள் மின் புத்தகமாக (E- Book) இருந்தால் அதை எனக்கு அனுப்புங்கள் அல்லது அதற்கான link கொடுங்கள். பலருக்கும் பிரயோஜனமாயிருக்கும். எனது மின்னஞ்சல் முகவரி
arputhaa@yahoo.co.in
arputhaa@yahoo.co.in
Subscribe to:
Posts (Atom)