Wednesday, December 2, 2009

தமிழ் கிறிஸ்தவ புத்தகங்கள்

தமிழ் மொழியில் முதன் முதல் அச்சிடப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம். அது மட்டுமல்ல இந்தியாவிலேயே முதல் புத்தகம் தமிழ் வேதாகமம் தான். தமிழ் வேதாகமம் அச்சிடப்பட்ட நாள் முதற்கொண்டு இதுகாறும் ஏராளமான கிறிஸ்தவ புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கின்றன. வழக்கம் போல் பழமை நூல்கள் இன்று பலர் கைகளில் இல்லை, புதிய நூல்கள் கூட இன்னமும் இணையதளங்களில் புழங்க வில்லை. இணையதளத்தில் கண்ட குப்பைகளுக்கெல்லாம் ஏராளமான மின் புத்தகங்கள் (E-Books) கிடைக்கும் போது தமிழ் கிறிஸ்தவ நூல்கள் கிட்டதட்ட இல்லை என்று சொல்லுமளவுக்கு இணைய தளத்தில் அவற்றை காண்பது அரிதாக உள்ளது. அக்குறையைப் போக்கும் ஒரு சிறிய முயற்சியே இந்த வலைப்பூ. உங்களிடம் ஏதேனும் கிறிஸ்தவ புத்தகங்கள் மின் புத்தகமாக (E- Book) இருந்தால் அதை எனக்கு அனுப்புங்கள் அல்லது அதற்கான link கொடுங்கள். பலருக்கும் பிரயோஜனமாயிருக்கும். எனது மின்னஞ்சல் முகவரி
arputhaa@yahoo.co.in

1 comment:

  1. http://www.bjnewlife.org/english/ebook/ebook_edition.php?lang=Tamil&bid=179

    ReplyDelete