Wednesday, December 2, 2009

தமிழ் வேதாகமம் WBTC பதிப்பு

ஆங்கிலத்தில் ஏராளமான வேதாகம மொழிபெயர்ப்புகள் உண்டு. தமிழில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு மொழிபெயர்ப்பும், ஏனைய கிறிஸ்தவர்கள் வேதாகமச் சங்கம் அச்சிடும் மொழிபெயர்ப்பு ஆக இரண்டு மொழிபெயர்ப்புகள் இருந்துவந்தது. பின்பு பொது மொழி பெயர்ப்பு வெளிவந்தது. பொது மொழிபெயர்ப்பும் கூட இன்னமும் பரவலாக எல்லாராலும் பயன்படுத்தப்படவில்லை. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்தான் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு பயன்படுத்திவருகின்றனர். சி.எஸ்.ஐ மற்றும் பெந்தோகோஸ்தே போன்ற இதர கிறிஸ்தவர்கள் பழைய மொழிபெயர்ப்பையே இன்றும் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். பொது மொழி பெயர்ப்பில் குறை உண்டு என்று சொல்பவர்களுக்கு WBTC வெளியிட்டுள்ள வேதாகம மொழி பெயர்ப்பு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். ஆங்கில வேதாகமங்களுக்கு இணையாக உள் தலைப்புகளையும் சிறு விளக்கங்களையும் கொண்ட இப்புதிய வேதாகமம் மிகவும் பயனுள்ளதாகவும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் வேதாகமத்தை Download செய்ய Please click the links below
1.பழைய ஏற்பாடு
2. புதிய ஏற்பாடு

No comments:

Post a Comment