Monday, August 23, 2010

நிறைவாழ்வு - சாது சுந்தர்சிங்

இந்தியாவில் தேவனுக்காக ஊழியம் செய்து நன்கு அறியப்பட்டவர்களில் ஒருவர் சாது சுந்தர்சிங் ஆவார். இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் ஊழியம் செய்த அவர் செல்லுமிடங்களிலிலெல்லாம் கிறிஸ்துவின் நற்கந்தமாகவும், கிறிஸ்துவைக் குறித்து அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிறவராகவும் திகழ்ந்தார். இவரைப் பார்த்தவர்கள் இவரையல்ல கிறிஸ்துவையே பார்ப்பதாக எண்ணினார்கள் (நாமும் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறோமா?). தனி மனித துதியை விரும்பும் கிறிஸ்தவ ஊழியர்கள் மிகுந்த இக்காலத்தில் இவரைப்போன்று பலனை எதிர்பாராது ஊழியம் செய்பவர்கள் அனேகர் எழும்ப ஜெபிப்போம். ஒரு முறை இவர் கேரளத்தில் இருந்த போது மரித்த ஒரு சிறுவனை ஆண்டவரின் கிருபையால் உயிரோடே எழுப்பினார். ஆனால் அந்த சிறுவனின் தாயார் இவரது காலில் விழுந்து வணங்கி இவரை மிகவும் புகழ்ந்து “ நீங்கதான் கடவுள்” என்று சொன்னார். இந்த சம்பவம் சுந்தர்சிங்கை மிகவும் துக்கப்படுத்தியது. ஆகவே கண்ணீருடன் ஜெபித்த சிங் “ஆண்டவரே, உம்மைப் பார்ப்பதற்குப் பதிலாக ஜனங்கள் என்னைப் பார்ப்பதற்கே வரங்கள் பயன்படுமேயானால், அவ்வரங்கள் எனக்கு வேண்டாம்” என்று ஜெபித்தார். அதற்குப் பின் அவர் அற்புத அடையாளங்களை விட அதை விட மிகப்பெரிதான இரட்சிப்பைக் குறித்தே செல்லுமிடமெங்கிலும் பிரசங்கித்தார். அவரின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமானவைகள். மேலும் அவை நாம் கிறிஸ்துவுடன் நெருங்கி பரலோக வாழ்வை வாழ தூண்டும், ஏனெனில் சாது சுந்தர் சிங் அவர்கள் தாமே கிறிஸ்துவோடு கூட ஒரு நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் “நிறைவாழ்வு” புத்தகம் சாது சுந்தர் சிங் அவர்கள் சுவிட்சர்லாந்தில் ஊழியம் செய்த போது பண்ணின பிரசங்கங்களின் தொகுப்பு ஆகும். நிச்சயமாகவே மிகவும் பயனுள்ள புத்தகம்.


நிறைவாழ்வு புத்தகத்தை தரவிறக்கம் (Download) செய்ய கீழே உள்ள சுட்டியை Click செய்யவும்:  http://uploading.com/files/get/5b6mb97b/Abundant%20Life%20Tamil.pdf/

Wednesday, August 18, 2010

பிரார்த்தனை மாலை - புத்தக அறிமுகம்

ஜெபம் என்பது தேவனுடன் நம் இருதயத்திலிருந்து ஏறெடுக்கப்படும் ஒரு உரையாடல் மற்றும் உறவு ஆகும். இன்று பலரும் பொது இடங்களில் ஜெபிக்கச் சொன்னால், எனக்கு ஜெபிக்கத்தெரியாது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஜெபம் என்பது ஒரு வரம் அல்லது கற்க வேண்டிய கடினமான கலை என்று நினைப்பதினாலேயே சிலர் ஜெபம் என்றது ஒதுங்குகின்றனர். மனிதரோடு மணிக்கணக்கில் பேசத்தயாராக இருக்கும் நான் தேவனுடன் பேச தெரியாது என்று சொல்வது முறையாகாதன்றோ? ஜெபம் மிக மிக எளிமையான, தேவனுக்கும் மனிதனுக்குமான இணைப்புப் பாலம் ஆகும். ஜெபம் குறித்த பல புத்தகங்கள் உண்டு என்றாலும் கூட  ஜான் பெயிலி அவர்கள் எழுதிய A Diary of Private prayers என்ற நூலின் தமிழாக்கம் பிரார்த்தனை மாலை மிகவும் அருமையான புத்தகம் ஆகும். இப்புத்தகத்தில் காணப்படும் ஒவ்வொரு ஜெபங்களும் சொற்சுவையுடன் மாத்திரம் இல்லாமல் வசனச் செறிவுடனும் மிகுந்த அர்த்தமுள்ள கருத்தான ஜெபங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது.  வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்புத்தகம் மிகுந்த பிரயோஜனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


பிரார்த்தனை மாலை புத்தகத்தை Download செய்ய பின்வரும் சு்ட்டியை Click செய்யவும்: http://uploading.com/files/em1c5151/prayer%2Bgarland.pdf/